“அப்பா வேண்டாம் விட்டுருங்க”… அலறியும் கேட்காத கொடூர மனம்… பெற்ற தந்தையே எமன்… 21 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்…!!

By Gayathri on புரட்டாதி 1, 2026

Spread the love

டாபரா அருகே உள்ள பிச்சோர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பதாரியா புரா கிராமத்தில், அனைவரையும் உறைய வைக்கும் வகையில் ஒரு கொடூரமான கௌரவக் கொலை அரங்கேறியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக, 21 வயதான நந்தினி யாதவ் அனு என்ற இளம்பெண்ணை அவரது சொந்த தந்தை பகவண்டாஸ் மற்றும் மாமா சந்தோஷ் யாதவ் ஆகியோர் ஈவுஇரக்கமின்றி கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளனர். உள்ளூர் வணிக வளாகம் ஒன்றில் வேலை செய்து வந்த நந்தினி, தனது துணிகளை எடுப்பதற்காக வீட்டிற்கு வந்த நேரத்தில், ஏற்கனவே கொலை வெறியுடன் அங்கு காத்திருந்த இருவரும் இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.

நந்தினியைக் கொன்றது மட்டுமின்றி, அங்கிருந்த அவரது மைனர் சகோதரியையும் அந்த அரக்கர்கள் கொல்ல முயன்றுள்ளனர். வீட்டில் நடந்த கடுமையான சண்டைக்குப் பிறகே தந்தை மற்றும் மாமா இந்த கொலையைச் செய்ததாக உயிர் தப்பிய சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த பயங்கரச் சம்பவத்திற்குப் பிறகு, கடும் மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் ஆளான நந்தினியின் தாயார் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். பெற்றவர்களே ஈவுஇரக்கமின்றி செய்த இந்தக் கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.