மத்திய அரசு வருடாந்திர FASTag பாஸின் விலையை உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர பாஸ் விலை தற்போது ரூ.3,000-லிருந்து ரூ.3,075 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.75 விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தமிழகத்தில் உள்ள 66 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணங்கள் 5 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளன. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த அடுத்தடுத்த கட்டண உயர்வுகள் சரக்கு வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய விலை மாற்றங்கள் மற்றும் சுங்கக்கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்திலேயே இத்தகைய உயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து சங்கத்தினர் மத்தியில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
