கோழிக்கு தீனி இட்டபோது நடந்த சோகம்.. 26 அடி மலைப்பாம்பின் வயிற்றுக்குள் விவசாயியின் உடல்.. ஆடிப்போன கிராம மக்கள்..!

By Nanthini on ஆடி 8, 2025

Spread the love

இந்தோனேசியாவில் 26 அடி மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து விவசாயி ஒருவரின் உடல் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கு கிழக்கு சுலவெசி பகுதியில் உள்ள ஒரு மலை கிராமத்தில் 61 வயதான விவசாயியை 26 அடி நீளமுடைய மலைப்பாம்பு ஒன்று விழுங்கியுள்ளது. அந்த விவசாயி தனது கோழிகளுக்கு தீனி போடும்போது புல்வெளியில் இருந்த பாம்பு அவர் மீது பாய்ந்து அவரது காலை கடித்து பிடித்து பின்னர் உடலை நசுக்கி முழுவதுமாக விழுங்கியுள்ளது. அன்று அவர் வீடு திரும்பவில்லை என்பதால் குடும்பத்தினர் அனைவரும் தீவிரமாக தேடி உள்ளனர்.

சாலையோரம் அவரது மோட்டார் சைக்கிள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தீவிரமாக தேடிய நிலையில் அங்கிருந்த குடிசை ஒன்றுக்கு அருகே வயிறு வீக்கம் கொண்ட ஒரு மலைப்பாம்பை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைப் பிடித்து வெட்டிப் பார்த்தபோது அதில் உடை அணிந்த நிலையில் விவசாயியின் உடல் இருந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது முதல் முறையாக நடந்துள்ளது.. பாம்புகள் சமீபகாலமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாக காணப்படுவதாகவும், மக்கள் தனியாக காட்டுக்குள் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.