தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளுக்கு புனைப்பெயர் வைப்பது அவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதைப் போல பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் அன்பால் கிடைக்கும் பரிசாக பார்க்கின்றனர். மக்கள் தலைவன், நடிகர் திலகம், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் என அடுத்தடுத்து நடிகர்கள் பலவிதமாக கொண்டாடப்பட்டாலும் நடிகைகளுக்கு கனவு கன்னி என்ற பெயரோடு முடிந்து விடும். ஆனால் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படக்கூடிய ஒரே நடிகை நயன்தாரா தான். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா இரண்டாவது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ஆதவன், பில்லா மற்றும் ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா இரண்டாவது முறையாக கம்பேக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை உயர வைத்தார். ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தற்போது தன்னை யாரும் அப்படி அழைக்க வேண்டாம் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என் வாழ்க்கை எப்போதும் ஒரு சிறந்த புத்தகமாக இருந்துள்ளது. உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் அதனை அழகு சேர்த்து உள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள். நீங்கள் பலரும் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளீர்கள். உங்களுடைய பெயர் ஆதரவால் உருவான இந்த பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என் பெயர் தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று என்று நயன்தாரா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக அஜித் மற்றும் கமல் ஆகியோர் தங்களுடைய பெயருக்கு முன்னால் புனை பெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இட்ட நிலையில் தற்போது அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…