தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவர் எத்தனையோ திரைப்படங்கள் நடித்திருந்தாலும் சேது திரைப்படம் மூலமாகத்தான் தனக்கென ஒரு புகழை சினிமாவில் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த இவர் தன்னுடைய கேரக்டருக்கு தகுந்தது போல உடலை மாற்றிக் கொண்டு நடிப்பதில் பெயர் போனவர். குறிப்பாக ஐ திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இறுதியாக இவர் நடித்த தங்கலான் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. அடுத்தபடியாக எஸ்யூ அருண்குமார் இயக்கியுள்ள வீரதீர சூரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது.
விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது விக்ரம் நடிக்க உள்ள 63 வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மண்டேலா மற்றும் மாவீரன் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் மடோன் அஸ்வினுடன் விக்ரம் கைகோர்த்துள்ளார். இது திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. இப்படியான நிலையில் விக்ரம் குறித்து பிரபல இயக்குனர் விஜய் மில்டன் சமீபத்தில் நடித்த பேட்டியில், முதலில் விக்ரமிடம் 10 எண்றதுக்குள்ள படத்தின் கதையை சொல்ல முயற்சி செய்தேன். அப்போது சரியா அவர் கதையை கேக்கல. அதன் பிறகு கோலி சோடா திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் கழித்து எனக்கு போன் பண்ணாரு.
நான் தான் விக்ரம் பேசுறேன் எனக்காக உங்க கிட்ட ஏதாவது கதை இருக்கா என்று கேட்டார். இருக்கு சார் சொல்றேன் என்று சொன்னதும் கோலி சோடா படத்தை பாத்துட்டு என் மனைவி படம் ரொம்ப நல்லா இருக்கு அவர்கிட்ட நீங்க பேசுங்க என்று சொன்னாங்க. நீங்க நேர்ல வாங்க பேசலாம் என்று விக்ரம் சொன்னார். நானும் வீட்டுக்குப் போய் கதையை சொன்னதும் பாதிக்கதை சொல்லி முடித்ததும் அவர் பாதியிலேயே எழுந்து போயிட்டாரு. அடுத்த பாதி கதையை சொல்வதற்கு நான் அமர்ந்து கொண்டிருந்தபோது என்ன பதில் சொல்வார் என குழம்பிக் கொண்டிருந்தேன்.
அப்போது விக்ரம் சார் மனைவி வெளியில் வந்து படத்தோட கதை ரொம்ப நல்லா இருக்குன்னு உள்ள குதிச்சிட்டு இருக்காரு. வழக்கமா முதல் பாதி கதையை கேட்டுட்டு உள்ள வந்து நீங்க ஏதாவது வெளியில போய் சொல்லி அவங்கள அனுப்பிடுங்க இரண்டாவது பாதியை எப்படி கேட்கிறது என்று தெரியவில்லை என்று தான் சொல்லுவாரு. ஆனா உங்க கதை ரொம்ப புடிச்சி போய் அவ்வளவு சந்தோசமா குதிச்சிட்டு இருக்காரு என்று சொன்னாங்க. எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. அதன் பிறகு தான் பத்து என்றதுக்குள்ள படம் உருவானது என விஜய் மில்டன் பேசியுள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…