சூரி படத்தை நம்பி சென்னையில் குடியேறிய பிரபல மலையாள நடிகை.. அடுத்த நயன்தாரா இவங்கதானா..?

By admin on ஆனி 7, 2024

Spread the love

காமெடியனாக திரையுலகில் என்ட்ரி கொடுத்து இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சூரி. விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சூரி நடிப்பில் ரிலீசான கருடன் படமும் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு சிவகார்த்திகேயன் தயாரித்த படம் தேர்வு…  உற்சாகத்தில் படக்குழுவினர்… – News18 தமிழ்

   

இந்நிலையில் கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்தில் சூரி நடித்துள்ளார். இந்த படத்தை தி லிட்டில் வேவ் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கொட்டுகாளி படம் தேர்வானது. ஒரு தமிழ் படம் அந்த கௌரவத்தை பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

   

Kottukkaali in Berlin International Film Festival : சூரிக்கு தொடரும்  பன்னாட்டு அங்கீகாரம்.. பெர்லின் சர்வதேச திரைப்பட விழா - திரையிடப்படும்  கொட்டுக்காளி!

 

இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தில் பிரபல மலையாள நடிகையான அன்னா பெண் சூரிக்கு ஜோடியாக நடிக்கிறார். கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் அன்னா பெண். இவரது நடிப்பில் ரிலீஸ் ஆன என்ன திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கல்கி திரைப்படத்தின் மூலம் அன்னா பெண் தெலுங்கிலும் அறிமுகமாகிறார்.

சர்வதேச விழாவில் வினோத் ராஜின் கொட்டுக்காளி.. மகிழ்ச்சியில் சிவா..!

கொட்டுக்காளி படம் ரிலீஸ் ஆன பிறகு தமிழில் தனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கண்டிப்பாக வரும் என அன்னா பெண் ஆணித்தனமாக நம்புகிறாராம். மேலும் சென்னையில் குடியேறுவதற்கு ஒரு வீட்டையும் பார்த்து மேனேஜரையும் அப்பாயிண்ட் செய்து விட்டாராம். கொட்டுக்காளி திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என அன்னா பெண் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

Manju Warrier Inspires Most Of Us To Create Our Own Space: Anna Ben