நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார்.
தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த இவர் தற்போது ஹிந்தியில் கலக்கி வருகின்றார்.
சமீபத்தில் ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..