பிரபல சீரியல் நடிகையான ரேஷ்மா பசிபுலேட்டி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரேஷ்மா பசிபுலேட்டி. இந்த படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் சீரியல்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து வெப் சீரியஸ்கள் சீரியல்கள் நடித்து வருகின்றார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருக்கின்றார்.
கோபியின் 2-வது மனைவியாக நடித்துவரும் இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகின்றது.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ரேஷ்மா அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.