பிரபல மலையாள நடிகரான நிர்மல் பொன்னி கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீசான நவகிரகத்தில் ஸ்வாகதம் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவான ஆமென் திரைப்படத்தில் பாதிரியாராக நடித்து நிர்மல் பொன்னி பிரபலமானார். மேலும் உள்ளிட்ட ஐந்து திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நேற்று அதிகாலை நிர்மல் பொன்னி மாரடைப்பால் அவரது வீட்டில் உயிரிழந்தார். அவர் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தார். நிர்மல் பொன்னி உயிரிழந்த செய்தி அவரது நண்பரும் இயக்குனருமான சஞ்சய் படியூர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.

#image_title
அவர் கூறியிருப்பதாவது என் அன்பு நண்பருக்கு மனம் உடைந்த பிரியாவிடை. கொச்சச்சன் ஆமன் படத்தில் மைய கதாபாத்திரம் நிர்மல் பொன்னி இன்று அதிகாலை மாரடைப்பால் இறந்துவிட்டார். என் அன்பு நண்பனின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நித்திய அமைதியில் ஓய்வு எடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

நிர்மல் பொன்னிக்கு 37 வயது தான் ஆகிறது. தனது வாழ்க்கையை நகைச்சுவை நடிகராக தொடங்கிய நிர்மல் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். நிர்மல் யூட்யூப் வீடியோக்களையும் மக்கள் விரும்பி பார்ப்பார்கள். அதுவும் அவருக்கு வருமானத்தை தேடி தந்தது. 37 வயதான நிர்மல் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் அழுத்தியுள்ளது.

