மனைவியால் சிக்கல்… ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இயக்குனர் நெல்சனிடமும் விசாரணை… பரபரப்பில் கோலிவுட்…

By admin on ஆவணி 24, 2024

Spread the love

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் பகுதியை அடுத்துள்ள செம்பியத்தில் ஆம்ஸ்ட்ராங் புதிதாக கட்டி வந்த வீட்டுக் கட்டிடத்தின் அருகிலேயே படுகொலை செய்யப்பட்டது தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

   

ஒரு தமிழக மாநில கட்சியின் தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனின் நிலைமை என்னாகும் என்று தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்தனர். பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் ,ஊர்வலங்கள் போன்றவற்றை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவிக்கு சம்பந்தம் இருப்பதாக முதலில் அறிவித்த காவல்துறை நெல்சனின் மனைவியை விசாரணை செய்தது. அவரின் விசாரணை முடித்த பின்பு தற்போது இயக்குனர் நெல்சனிடம் தனிப்பட்ட காவல்துறையினர் விசாரணை செய்துள்ளார்.

   

சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய முன்தினம் இயக்குனர் நெல்சனிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான மொட்டை கிருஷ்ணனுக்கும் நெல்சன் மனைவி மோனிஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் தலைமறைவாகி இருக்கும் மொட்டை கிருஷ்ணனுக்கு நெல்சனின் மனைவி மோனிஷா 75 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதாகவும், இவர்கள் அடிக்கடி ஃபோனில் பேசி வந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டு முதலில் நெல்சனின் மனைவி மோனிஷாவுடன் விசாரணை நடத்தப்பட்டது.

மொட்டை கிருஷ்ணனும் நெல்சன் மனைவி மோனிஷாவும் கல்லூரி கால நண்பர்களாக இருந்து வந்துள்ளதால் நெல்சனிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தன்னைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று மோனிஷா மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தச் செய்தி கோலிவுட் சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.