CINEMA
SPB-ஐ ரிஜெக்ட் செய்து மலேசியா வாசுதேவனை பாட வைத்த இளையராஜா.. அந்த பாடலை மறக்க முடியுமா..!!
பிரபல நடிகரும் பாடகருமான மலேசியா வாசுதேவன் இதுவரை 8,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். இவர் மலேசியாவில் தமிழ் இசைக் குழு ஒன்றை பாடகராக இருந்தார். மேலும் மலேசியாவில் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக மலேசிய தமிழர்கள் இணைந்து தயாரித்த படம் ரத்தப் பேய். இந்த படத்தின் மூலம் வாசுதேவன் முதன்முறையாக நடிகராக அறிமுகமானார்.
முக்கியமாக ஒரு கைதியின் டைரி திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு மிரட்டலாக இருக்கும். அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. சுமார் 85 தமிழ் திரைப்படங்களில் மலேசியா வாசுதேவன் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, ஊர்க்காவலன் உள்ளிட்ட வெற்றி படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிலந்தி வலை உள்பட ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். சாமந்திப்பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு மலேசியா வாசுதேவன் இசையமைத்துள்ளார். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தது. இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து மலேசியா வாசுதேவன் பல மேடை கச்சேரிகளில் பாடியுள்ளார்..
ஜிகே வெங்கடேஷ் இசையமைத்த பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற திரைப்படத்தில் பாலுவிக்கிற பத்தமா என்ற பாடலை மலேசியா வாசுதேவன் முதன் முதலில் பாடினார். ஒரு முறை இளையராஜா 16 வயதினிலே திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை எஸ்.பி பாலசுப்ரமணியம் பாட வைத்துள்ளார். ஆனால் தொண்டை கட்டி இருந்ததால் எஸ்பிபியின் குரல் சரியாக வரவில்லை. இதனால் அவரை பாட வேண்டாம் எனக் கூறிவிட்டு இளையராஜா மலேசியா வாசுதேவனை பாட வைத்துள்ளார். அந்த படம் தான் அவருக்கு ஒரு அடையாளத்தை தேடி தந்தது. அந்த பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு என்ற பாடல். பாடல் சூப்பர் ஹிட் ஆகிய மலேசியா வாசுதேவனின் பிரபலமானார்.