தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகம் என்ற என்ற புதிய கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விஜய்யின் தவெகவில் இயக்குநர் வெங்கட் பிரபு இணைந்துள்ளதாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, தவெகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இது AI புகைப்படம், அவர் தவெகவில் இணைந்ததாக எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.
