நெல்லை வள்ளியூர் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அமர்வது தொடர்பாக இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை இருந்த நிலையில் ஒரு மாணவன் தன்னுடைய புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சற்று முன் கொடூரமாக வெட்டியுள்ளார்.
படுகாயம் அடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் பரபரப்பு கிளப்பியுள்ளது.
