அப்போ ஸ்ரீதேவியை சொர்க்கத்துக்கு போய் கைது பண்ணுவீங்களா..? அல்லு அர்ஜுன் கைது குறித்து பிரபல இயக்குனர் அதிரடி கருத்து..!

By Soundarya on மார்கழி 21, 2024

Spread the love

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியானதற்கு முதல் நாள் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் முதல் காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்த அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி உதவியும் அறிவித்திருந்தார்.

   

இந்த சம்பவத்தால் தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பாக அல்லு அர்ஜுனை கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவர்கள் பிறகு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றது.

   

சிறையில் இருந்து விடுதலை: அல்லு அர்ஜுன் வேதனை | pushpa 2 actor allu arjun  released on bail - kamadenu tamil

 

பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த  நிலையில் உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டதையடுத்து மத்திய சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்தார். இந்நிலையில் அல்லுஅர்ஜூனுக்கு ஆதரவாக இயக்குனர் ராம் கோபால் வர்மா பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில் அல்லு அர்ஜுன் கைதுக்கு எதிராக ஒவ்வொரு பிரபலமும் கடுமையாக போராட வேண்டும். ஒருவர் நடிகராகவோ அல்லது அரசியல் பிரபாமாகவோ இருப்பது ஒரு குற்றமா? என்னுடைய க்ஷண க்ஷணம் படத்தின் போது ஸ்ரீதேவியை பார்க்க வந்த ரசிகர்களில் 3 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீதேவியை தெலுங்கானா போலீஸ் சொர்க்கத்துக்கு சென்று கைது செய்யுமா? என்று பதிவிட்டுள்ளார்.