தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள நடிகர் தான் ஜீவா. ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து டிஷ்யூம், பொறி என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் அப்படியே ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

குறிப்பாக சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்கு பின்னர் மிகப்பெரிய நடிகராக தமிழ் சினிமாவில் வளம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் தேர்வு செய்த சில படங்கள் அவருக்கு பெரிதாக எதுவும் கை கொடுக்கவில்லை. இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான பிளாக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ஜீவா கடந்த 2007 ஆம் ஆண்டு சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனது பத்து வயதில் முதல்முறையாக ஜீவா சுப்ரியாவை சந்தித்துள்ளார்.

இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது. ஜீவா தான் முதன் முதலில் தன்னுடைய காதலை சுப்ரியாவிடம் கூறியுள்ளார். சுப்ரியாவுக்கும் ஜீவ மீது காதல் இருந்த நிலையில் உடனே அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பள்ளி படிப்பை முடித்த கையோடு ஜீவா கிராபிக்ஸ் டிசைனிங் படித்தார். பிறகு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதனைப் போலவே சுப்ரியா எம் பி ஏ படித்து முடித்துவிட்டு இன்டீரியர் டிசைனிங் படித்துள்ளார். இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலர்களாக இருந்த நிலையில் இருவரும் தங்கள் துறையில் ஓரளவு முன்னேறிய பிறகு தங்கள் காதலை குடும்பத்தினரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.

இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2007 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார். திரை துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் எந்த ஒரு சர்ச்சையும் இல்லாமல் அமைதியான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது ஜீவாவின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
