விடாமுயற்சியில் இணைந்த விஜய் டிவி பிரபலம்… படம் பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணிடுவீங்களா? .

By Soundarya on மார்கழி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வருகின்றார். துபாயிலிருந்து நேற்று சென்னை கிளம்பி இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் டப்பிங் பணியிலும் ஈடுபட்டுள்ளார். இதனை முடித்த கையோடு குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் கமிட்டானார்.

#image_title

லைகா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் எடுக்கப்பட்டு வந்தது.ஆனால் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க அஜித் கமிட் ஆகிவிட்டார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது.

   
   

 

இரண்டு திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் குட் பேட் அக்லி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென்று விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஒருவழியாக லைக்கா அறிவிப்பை வெளியிட்டது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டை லைக்கா வெளியிட்டுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தில்  விஜய் டிவியின் தொகுப்பாளினியான ரம்யா இணைந்துள்ளார். அஜித் பட்டு வேட்டி சட்டையில் இருக்க அவருக்கு பக்கத்தில் vj ரம்யா புடவையில் கை கூப்பியபடி நிற்கிறார்.  பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்று பட நிறுவனம் கூறியிருந்த நிலையில் இப்போ இந்த அப்டேட் வந்ததால் இன்னும் படப்பிடிப்பு முடியலையா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள்.