காசுக்காக வீட்டுல இருந்து நகையை எடுத்து வித்துருவேன்… கடைசியா அப்பா சொன்ன அந்த வார்த்தை… ஓப்பனாக பேசிய நடிகர் ஸ்ரீ..!

By Soundarya on மார்கழி 21, 2024

Spread the love

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் கூட்டணியில் ஒன்று ஷங்கர் கணேஷ் ஜோடி. தமிழ் சினிமா உலகில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் சாதித்த நிலையில் அவர்களை அடுத்து இரட்டையர்களாக வந்து பிரபலமானவர்கள் சங்கர் கணேஷ். 70 களிலும் 80 களிலும் இவர்கள் இணைந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர்.

   

இளையராஜாவுக்கு முன்பே இவர்கள் இசையமைப்பாளர்களாக அறிமுகமாகி எம் ஜி ஆர் படங்களுக்கு எல்லாம் இசையமைத்துள்ளார்கள். ஆனால் இளையராஜாவின் வருகையால் தமிழ் சினிமா இசையின் போக்கு மாறியதால் இவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இளையராஜா முதல் நிலை இசையமைப்பாளரானார். இந்த இரட்டையர்கள் 90 கள் வரை பிஸியான இசையமைப்பாளர்களாக இருந்த நிலையில் கணேஷ் இறந்த பின்னரும் சங்கர் கணேஷ் என்ற பெயரிலேயே இசையமைத்து வந்தார்.

   

 

இவரின் மகன்தான் தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நாயகனாக நடித்துக் கலக்கி வரும் ஸ்ரீ. சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் ஆரம்பத்தில் ரொம்ப ஆன்மீகத்தில் இறங்கிட்டேன். எப்போதும் கோவிலிலேயே தான் இருப்பேன். அப்போ அப்பா பயந்து போய் என் நண்பர்களிடம் காசு கொடுத்து படத்துக்கு எங்கயாச்சும் கூட்டிட்டு போங்கன்னு சொன்னார். அவங்க என்னை ஒயின் ஷிப்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க. அப்படியே பழகி குடிப்பழக்கத்துக்கு ஆழகிட்டேன். அப்பா நிறைய நகை போட்ருப்பாரு.

அதை எல்லாமே ஒன்னு ஒண்ணா எடுத்து விக்க ஆரம்பிச்சேன்.  கடைசியில் ஒருநாள் என்னிடம் சொன்னார். இந்த நகைகளை எல்லாம் நான் உனக்காக மட்டும் தான் சேர்த்து வைத்திருக்கிறேன். அதை நீ இப்படி விற்று குடிக்கிறாய். நீ சங்கர் கணேஷின் மகன் என்பதைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. என் பெயரை எடுத்துவிட்டால் நீயார்? உன்னால் என் பெயரை சொல்லாமல் ஜெயித்துக் காட்ட முடியுமா என்று கேட்டார். அன்றுதான் எனக்கு உறைத்தது. அதன் பிறகுதான் நான் ஒரு சவாலாக நினைத்து நடிக்க வாய்ப்புத் தேடினேன். அப்போதுதான் அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று தெரிந்தது என்று கூறியுள்ளார்.