“நீங்க சங்கி என்பது நாட்டுக்கே தெரியுமே…” லோகேஷ் படத்துடன் நேருக்கு நேர் மோதல்…!  நடிகர் மாதவனை அட்டாக் செய்த பிரபல விமர்சகர்…!!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

பிரபல கண்டுபிடிப்பாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜிடிஎன்’ திரைப்படத்தில் நடி கர் மாதவன் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘டிசி’ திரைப்படத்துடன் மோதவுள்ளது. இதற்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாதவன், தான் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவானவர் அல்ல என்றும், நாட்டின் மீது பற்று கொண்டவன் என்பதால் நல்ல விஷயங்களை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்ப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் மாதவனின் இந்த அரசியல் விளக்கத்தைப் பகிர்ந்த பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தனது எக்ஸ் தள பக்கத்தில் மாதவனை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். “நீங்கள் ஒரு சங்கி என்பது நாட்டிற்கே வெளிப்படையாகத் தெரியும், இதற்கு தனியாக விளக்கம் எதுவும் தேவையில்லை” என அவர் கூறியுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திரையுலகில் தேசிய விருது பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் இருக்கும் மாதவன் மீது ப்ளூ சட்டை மாறன் நடத்தியுள்ள இந்தத் திடீர் அட்டாக் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.