சைவ, வைணவ மதங்களோடு பெண்களை ஒப்பிட்டு அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து, பொன்முடிக்கு எதிராகச் சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் அவரை அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு நீதிபதி கெடு விதித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் சூழலில், நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை ஆளும்கட்சியான திமுக தரப்பிற்கு மிகக் கடுமையான அதிர்ச்சியையும், அரசியல் ரீதியான பின்னடைவையும் ஏற்படுத்தியுள்ளது.
