பிரபல நடிகரான விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார். பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் எல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நாளை பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை டைட்டில் வெற்றியாளர்கள் பிரபலமாவார்கள். அதைவிட மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபலங்களும் இருக்கின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்தவர்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ஹரிஷ் கல்யாண்
இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுறையை ஏற்படுத்தியது. ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

ஜூலி
ஜூலி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது போராட்டத்தில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். ஜூலியும் எப்போது சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கவின்
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கவின் போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கு டைட்டில் கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் டாடா, ஸ்டார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சாக்ஷி அகர்வால்
சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் 3 வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கும் மக்கள் அமோக வரவேற்பு தந்தனர். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் சாட்சியாக பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். மற்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

வனிதா விஜயகுமார்
பிக் பாஸ் 2 சீசனில் வனிதா போட்டியாளராக பங்கேற்றார். இவருக்கு வத்திக்குச்சி வனிதா என்ற பெயர் வைத்தனர். அந்த சீசன் டைட்டில் வின்னர் ரித்திகா. அவரைவிட இப்போது வனிதா விஜயகுமார் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சாண்டி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சாண்டி கடைசி நிமிடத்தில் டைட்டிலை தவறவிட்டார். முகின் ராவ் டைட்டிலை வென்றாலும் அவரைவிட இப்போது சாண்டி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

ரியோ ராஜ்
தொகுப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மக்கள் ஆதரவை பெற்றவர் ரியோ. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரியோ நடிப்பில் வெளியான ஜோ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.

ரம்யா பாண்டியன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்

தாமரை
தாமரைச்செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலமானார் இப்போது சின்னத்திரை சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்

ஜி.பி முத்து
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து ஒரே வாரத்திலேயே ஜி.பி முத்து தனது குடும்பத்தை விட்டு இருக்க முடியவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவர் பல்வேறு திரைப்படங்களில் இப்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

