வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகளின் வினோத செயல்… பேரிடருக்கு அறிகுறி என மக்கள் அச்சம்…

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

பறவை, விலங்குகள், சிறு உயிரினங்களுக்கு மனிதர்களை விடவும் முன்கூட்டியே பேரிடர்களை அறியும் திறன் இருப்பதாக கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் விலங்குகள் மற்ற உயிரினங்கள் பறவைகளின் செய்கைகளை வைத்து அடுத்ததாக என்ன நடைபெறும் ஆபத்தான காலங்களில் இவைகளின் செயல்களை கண்டு கண்டுபிடித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து இருக்கின்றனர்.

   

அப்படி ஒரு வினோத செயல் தான் வேட்டங்குடி சரணாலயத்தில் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் பல சரணாலயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சரணாலயங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாட்டிலிருந்து பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்து குஞ்சுகளை பொரித்துக் கொண்டு வெளியேறும். இது ஆண்டுதோறும் நடக்கின்ற நிகழ்வு. ங்கெல்லாம் சரணாலயம் இருக்கின்றதோ அங்கெல்லாம் மக்கள் வெடி வெடிப்பது போன்றவற்றை தவிர்த்து பறவைகளுக்கு நல்ல ஒரு சூழலை ஏற்படுத்துவர்.

   

இந்த வேட்டங்குடி சரணாலயம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு பல தரப்பட்ட வெளிநாட்டு பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் வருகை தருகின்றது. இந்த ஆண்டும் அதேபோல் பல பறவைகள் வருகை தந்திருக்கின்றன. ஒவ்வொரு முறையும் மரக்கிளைகளில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் அந்த வெளிநாட்டு பறவைகள் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக மரத்தின் உச்சியில் கூடு கட்டி இருக்கிறது.

 

இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இப்படி இந்த பறவைகள் வினோதமாக மர உச்சியில் கூடு கட்டிருப்பதை பார்க்கும் பொழுது இது இந்த ஆண்டில் வேறு ஏதும் பேய் மழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர் நிகழ கூடுமா என்று அச்சமடைந்திருக்கின்றனர். இது பேரிடர் நிகழ்வதற்கான ஒரு அபாய அறிகுறி என்றும் பேசி வருகின்றனர்.