Amer Fort எனப்படும் ஆம்பர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் ஆம்பர் நகரத்தில் அமைந்துள்ளது. நான்கு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஆம்பர் கோட்டை ராஜஸ்தான் மாநில தலைநகர் ஆன ஜெய்ப்பூர் நகரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இது ராஜஸ்தானின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.

ஆரம்பத்தில் ஆம்பர் கோட்டை மீனவ குலத்தவர்களால் சிறிய அளவில் கட்டப்பட்டது. பின்னர் ராஜபுத்திர குலத்தினர் இப்பகுதியை மீனவக்களிடமிருந்து கைப்பற்றி ஆண்டனர். முதலாம் மன்னர் மான்சிங் என்னும் ராஜபுத்திர மன்னரால் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆம்பர் கோட்டையில் அமைந்திருக்கும் அரண்மனை ராஜபுத்திர குலத்தினருக்கும் மன்னர் குடும்பத்தினருக்கும் வாழிடமாக இருந்தது.
இந்த ஆம்பர் கோட்டை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆம்பர் கோட்டை ஆனது பாரம்பரிய இந்து மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலையை பின்பற்றி அமைக்கப்பட்டுள்ளது. பளிங்கு மற்றும் சிவப்பு கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நுட்பமான ஓவியங்கள் ராஜபுத்திர ஆட்சியாளர்களின் உருவப்படங்கள் ஆகியவை இந்த கோட்டையில் உள்ளன. ஆம்பர் கோட்டை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் தனி நுழைவாயில் மற்றும் முற்றத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கோட்டையின் பிரதான நுழைவாயில் சூரஜ் போல், சிலா தேவி கோயில், திவான் இ ஆம் என அழைக்கப்படும் பொது பார்வையாளர்கள் கூடம் ஒரு பெரிய மண்டபம் மொசைக் கண்ணாடி வேலைபாடுகளுடன் யானைகள் ஏற்றப்பட்ட இரண்டு தூண்கள் என பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கிறது ஆம்பர் கோட்டை. இந்த ஆம்பர் கோட்டையை சுவர் மற்றும் கூரைகளில் அழகான மலர் வேலைப்பாடுகள் மற்றும் கண்ணாடி ஓவியங்கள் உள்ளன.

இந்த ஆம்பர் கோட்டையில் முக்கியமாக கருதப்படும் அம்சம் ஷீஷ் மஹால். இது ஒரு மாயை கலந்ததாகும். நீங்கள் மண்டபத்திற்குள் இரண்டு மெழுகுவத்திகளை ஏற்றி வைத்தால் கூரைகளில் ஆயிரம் மின்னும் நட்சத்திரங்களை பார்ப்பது போல் இருக்கும். மகாலுக்கு எதிரே சுப்மஹால் சந்தன மற்றும் தந்ததால் கட்டப்பட்டுள்ளது. இது குளிர்ந்த நீர் ஓடும் பல ஓடைகளை கொண்டுள்ளது. இந்த கோட்டையின் மற்றும் ஒரு சிறப்பு அம்சம் மேஜிக் பிளவர் பளிங்கு கற்களால் செய்யப்பட்ட ஓவியம் ஆகும். ஜெய்பூரில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ஆம்பர் கோட்டை விளங்குகிறது. ஜோதா அக்பர், பாஜிராவ் மஸ்தானி போன்ற பாலிவுட் படங்களில் இந்த ஆம்பர் கோட்டையில் படப்பிடிப்பு நடத்திருப்பது நாம் பார்த்திருப்போம். கோட்டையை சுற்றி பார்க்கும் போது ராஜஸ்தானி கைவினை பொருட்கள் பார்க்கலாம். இது மன்னர் காலத்து கட்டிடக்கலையை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை அங்கு சென்றால் நம்மால் உணர முடியும்.
