உடல் சூட்டை குறைப்பது எப்படி…? பயனுள்ள எளிய டிப்ஸ் இதோ…

By admin on ஐப்பசி 5, 2024

Spread the love

இன்று நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடல் சூடு. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவராக இருக்கலாம் வெயிலில் வேலை செய்பவராக இருக்கலாம் இல்லை அடிக்கடி வெயிலில் சென்று வருபவர்களாக இருக்கலாம் ஓட்டுனர்களாக இருக்கலாம் அனைவருக்கும் உடல் சூடு பொதுவான ஒரு உடல் உபாதை ஆகும். உடல் சூடு பல உடல் உபாதைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் நேரடி காரணமாக இருக்கிறது. இந்த உடல் சூட்டை அவ்வப்போது குறைக்க வேண்டும். அது எளிமையாக எப்படி செய்வது என்பதை இனி காண்போம்.

   

உடல் சூடு இருப்பவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் ந்த அளவுக்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலில் சூடு குறையும். அடிக்கடி காற்றாட வெளியே சென்று வாருங்கள். வீட்டுக்குள்ளேயே அல்லது அலுவலகம் உள்ளேயே புழுக்கத்திலேயே இருக்காதீர்கள்.

   

குளிர்ந்த காற்று உடலில் படும்போது சூடு குறையும். உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் குளியுங்கள். சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கட்டி கொண்டு உடலின் முக்கியமான புள்ளிகள் ஆன மணிக்கட்டு, கழுத்து, நெஞ்சு பகுதி மற்றும் வயிற்றில் ஒற்றி எடுங்கள். இவை உடலில் உள்ளே உள்ள சூட்டை உடனே வெளியேற்றும்.

 

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற துணிகளை தவிர்த்து பருத்தி மற்றும் கைத்தறி துணிகளை அணிவது வெப்பம் எளிதாக வெளியேற உதவும். எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் சூட்டை குறைக்க மிக நல்ல வழியாகும். சூட்டை குறைக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் ப ஜூஸ்களாகவும் அருந்தலாம். இளநீர், நுங்கு, மோர், ஊறவைத்த வெந்தயம் ஆகியவை உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

உடல் சூடு பிரச்சனை அதிகப்பட்டு விட்டால் கண் வலி, கண் எரிச்சல், தலைவலி, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளை கொண்டிருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். உடலில் நாம் ஏதாவது ஒரு சிறு உபாதை ஏற்பட்டாலும் அதை ஆரம்பத்திலே கவனம் எடுத்துக் கொண்டால் அது விரைவில் சரியாவதுடன் பலவித நோய்களை தடுப்பதற்கு அது உதவும். அதனால் நம் உடல் நிலையை எப்போதும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.