ஆன்மிக பாடகர் சக்தி சண்முகராஜா அம்மன் பாடல்களை பாடி புகழ்பெற்றவர். இவர் பாடி, இசையமைத்த மலையனூரு அங்காளியே, வேப்பிலை நாயகி, ஆடி வரா ஓடி வரா உள்ளிட்ட பாடல்கள் ஆடி மாதத்தில் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒலிக்கும் முக்கியமான பாடல்கள் ஆகும். இவர் பாடல்களை கேட்டாலே தெய்வீகம் வழிந்தோடும்.
சிறு வயதில் இருந்தே தன்னை ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட சக்தி சண்முகராஜா, அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்திலேயே மறைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணம் ஆன்மீக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
