ஜூன், ஜூலையில் அரசு விடுமுறையின்றி சோகமாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் காத்திருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 அரசு விடுமுறைகள் உள்ளன. பொதுவாக ஆகஸ்ட் மாதம் பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களின் மாதமாகும். இதனால் பள்ளி மாணவர்களுக்கு நிறைய விடுமுறை கிடைக்கும். ரக்ஷா பந்தன் முதல் நாக பஞ்சமி வரை, மாதம் முழுவதும் பல பண்டிகைகள் கொண்டாடப்படும்.
அதன்படி ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம் (வெள்ளிகிழமை), ஆகஸ்ட் 16 கோகுலாஷ்டமி (சனிக்கிழமை), ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி (புதன்கிழமை ) என மூன்று நாள்கள் விடுமுறை இருக்கிறது. ஆகஸ்ட் 15, 17 வரை 3 நாள்கள் தொடர் விடுமுறை.
