சென்னை அண்ணா நகரில் வசித்து வந்த மத்திய அரசு ஊழியர் ஆன நவீன் கண்ணன் என்பவர் தன்னுடைய மனைவி நிவேதிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு மகனையும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகர் 18வது பிரதான சாலை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நவீன் கண்ணன் (38) குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய அரசு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நிவேதிதா பெரம்பூர் தெற்கு ரயில்வே லோகோ அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
இவர்களுக்கு லிவின் என்ற ஏழு வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவர்களுடன் நவீன் கண்ணனின் வயதான தந்தை மற்றும் தாய் வசித்து வருகின்றன. இதனிடையே மத்திய அரசு அதிகாரியான நவீன் கண்ணன் மீது கையூட்டு புகார்கள் இருந்துள்ளது. மேலும் இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்தில் இருந்து உள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த நிலையில் தனது பெற்றோரிடம் இது பற்றி அவர் கூறவில்லை. நேற்று காலை தன் தாய் புவனேஸ்வரி இடம் நான் வெளியில் செல்கிறேன் என்று பதட்டத்துடன் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். சில மணி நேரத்திற்கு பிறகு புது நம்பரில் தாயை தொடர்பு கொண்ட அவர், மனைவியையும் மகனையும் தொந்தரவு செய்ய வேண்டாம்.
அவர்கள் தூங்குகிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மருமகள் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது நிவேதிதா கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடியபடியும் அருகில் மகன் மூச்சு பேச்சு இல்லாமலும் கிடந்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் நவீன் கண்ணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
நிவேதிதா அறுவை சிகிச்சை முடிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டபோது, என்னை காப்பாத்தாதீங்க, என் கணவர் நல்லவர், மூன்று பேரும் சேர்ந்து தான் சாக முடிவு செய்தோம் என்று கதறி அழுதார். விசாரணையில் நவீன் நிவேதிதாவை கழுத்தை அறுக்கும் போது தலையணை போன்றவற்றிலும் கத்தி பட்டு தலையணை முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நவீன் எழுதி வைத்த கடிதத்தில் தான் பணத்தை இழந்தது குறித்தும் மேலும் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டும் குறிப்பிட்டுள்ளார். இந்தியா முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தால் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பெரியமேடு குமாரப்பா தெருவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று காலை அறை எடுத்துத் தங்கிய இளம்…
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மனின் உண்மையான பெயர் 'தடாதகை' என்பதாகும். மலையத்துவஜ பாண்டிய மன்னனின் யாகத்தில் மூன்று மார்புகளுடன்…
சின்னத்திரையில் 'கனா காணும் காலங்கள்' மூலம் அறிமுகமாகி, தற்போது முன்னணி சீரியல் நடிகையாக வலம் வரும் ஹரிப்பிரியா, தனது தனிப்பட்ட…
தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில்…
மார்கஸ் வெஸ்ஸன் (Marcus Wesson) எனும் கொடூர மனிதனின் இந்தச் செயல், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தையே உலுக்கிய ஒரு கருப்பு…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய 'கோல்ட் கார்டு' (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை…