தமிழகத்தின் மூத்த அரசியல் ஆளுமையும், முன்னாள் அமைச்சருமான 99 வயது டாக்டர் எச்.வி. ஹண்டே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தனது வாக்கினைப் பதிவு செய்து இளைஞர்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளார். 1946-ல் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே தனது முதல் வாக்கைப் பதிவு செய்த இவர், கடந்த 80 ஆண்டுகளாகத் தடையின்றித் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகிறார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய இவர், 1984-ல் எம்.ஜி.ஆர். உடல்நலம் குன்றியபோது அவருக்கு நிழல் போல இருந்து சிகிச்சைகளை ஒருங்கிணைத்தவர். அமெரிக்காவிற்கு அவரை அழைத்துச் சென்றது முதல், அவர் சிகிச்சை பெற்றபோது ஆண்டிப்பட்டி தொகுதிக்கான வேட்புமனு ஆவணங்களைக் கையாண்டது வரை எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர்.
மருத்துவத் துறையில் சிறந்த சேவைக்காகப் பி.சி. ராய் விருது பெற்ற ஹண்டே, கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை மிக்கவர். எம்.ஜி.ஆரின் மருத்துவ ரகசியக் கோப்புகளை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து, பின்னர் அரசு வசம் ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர். தள்ளாத வயதிலும் தட்டு தடுமாறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து அவர் வாக்களித்ததைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். “வாக்களிப்பது என்பது ஒரு உரிமை மட்டுமல்ல, அது தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொறுப்பு” என்று அவர் விடுத்த செய்தி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…
ஆம் ஆத்மி கட்சியின் (AAP) முக்கிய முகமாகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்த ராகவ் சதா, திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய…
ஆயிரக்கணக்கான எறும்புகளை உயிரோடு தீயிட்டு எரிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒரு நபர்…