“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, ‘சனீஸ்வர பரிகார நிலையம்’ என்ற பெயரில் மாந்திரீக மையம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளான்.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு நன்கொடை கேட்கச் சென்ற பள்ளிச் சிறுமியிடம் விஜயராஜா பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளான். அச்சிறுமி தப்பித்து வந்து தனது தோழியிடம் கூறிய போது, அவளுக்கும் இதேபோன்று நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து, ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு சாமியாரின் மையப் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர்.

   

அங்குப் பள்ளி மாணவிகளின் சீருடைகளும், அங்கிருந்த லேப்டாப்பில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் இருப்பது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், பதுங்கியிருந்த போலி சாமியார் விஜயராஜாவைப் பிடித்துக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.