ஐயோ… நீ வீட்டுக்கு வா… சேர்த்து வைக்கிறோம்… நீதிமன்றத்தில் கல்யாணம் செய்துவிட்டு… புதுப்பெண்ணைச் சிறைவைத்த பெற்றோர்… மாடியிலிருந்து குதித்து விபரீத முடிவு… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 17, 2026

Spread the love

காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின் பெற்றோர், வீட்டிற்குத் திரும்பி வந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனர். குடும்பத்தினரின் வார்த்தையை நம்பி அப்பெண்ணும் மீண்டும் சொந்த வீட்டிற்குத் திரும்பி வந்தார்.

வாக்குறுதி அளித்தபடியே, பெற்றோர் அந்தப் பெண்ணையும் இளைஞனையும் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று சட்டப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணம் முடிந்த கையோடு அப்பெண்ணை மட்டும் மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து அடைத்து வைத்தனர். கணவனுடன் வாழ அவளை அனுப்ப மறுத்து, வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

   

https://twitter.com/B_T_C_1/status/2100318306188083263/video/1

   

பெற்றோரின் இந்த ஏமாற்றத்தாலும், கணவனுடன் வாழ முடியவில்லையே என்ற தீவிர மன உளைச்சலாலும் அதிர்ச்சியடைந்த அப்பெண், வேறு வழியின்றி வீட்டின் கூரையிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.