தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி பூசலும், கோஷ்டி மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இயக்கத்திலிருந்து வந்த பழைய நிர்வாகிகளுக்கும், புதிதாக இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் போன்ற தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே அதிகாரப்போட்டியும் மோதல்களும் தலைதூக்கியுள்ளன. ஆனால், இந்த முக்கிய விவகாரங்களை கட்சியின் தலைவரான விஜய் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என்ற அதிருப்தி தொண்டர்கள் மத்தியில் பகிரங்கமாக வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளிதழ்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் விவாதப் பொருளாய் மாறியுள்ள இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண முதலமைச்சர் விஜய் உடனடியாகத் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. மாநிலத்தின் நிர்வாகப் பணிகளைத் தாண்டி, வாரத்தில் முறையாவது பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி மனக்கசப்புகளைக் களைய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டத் தவறினால் அது எதிர்காலத் தேர்தல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் விவேகமான தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
