வேலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (29) என்பவர், பெங்களூரில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்தபோது மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பெங்களூரில் கிருஷ்ணமூர்த்தியுடன் பணிபுரிந்த அன்பழகன் என்பவருடன் மோனிஷாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
தொடர்ந்து கள்ளக்காதலனுடன் மோனிஷா நெருங்கிப் பழகி வந்ததை அறிந்த கிருஷ்ணமூர்த்தி, அவரைத் திருத்த முயன்று தனது மனைவியையும் குழந்தைகளையும் மாமியார் வீட்டில் தங்க வைத்துள்ளார். இருப்பினும், மோனிஷா தனது காதலன் அன்பழகனை மறைமுகமாகச் சந்தித்து வந்ததால், தனது வேலையை விட்டுவிட்டு கிருஷ்ணமூர்த்தி அங்கேயே தங்கியிருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் பணத்தேவை காரணமாக, மனைவியைக் கண்டித்துவிட்டு மீண்டும் பெங்களூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். ஆனால், கணவனைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த மோனிஷா, இதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு வந்த கிருஷ்ணமூர்த்திக்கு, மோனிஷா சாப்பாட்டில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அவர் ஆழ்ந்த மயக்கமடைந்ததும், கள்ளக்காதலன் அன்பழகனை வீட்டிற்கு வரவழைத்த மோனிஷா, அவருடன் சேர்ந்து தனது கணவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கிக் கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில் கிருஷ்ணமூர்த்தி இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் கூறி நாடகமாடியுள்ளார். இருப்பினும், மகனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கிருஷ்ணமூர்த்தியின் தந்தை காவல்துறையில் புகாரளித்தார்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மோனிஷா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இந்தத் திட்டத்திற்கு அன்பழகனின் நண்பர் சுப்பிரமணியன் என்பவரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கொலைக்கு காரணமான மோனிஷா, கள்ளக்காதலன் அன்பழகன் மற்றும் சுப்பிரமணியன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஒரு பெண்ணே தனது குழந்தைகளுக்குத் தந்தையான கணவனை, கள்ளக்காதலனுக்காகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் முகமாக அறியப்பட்ட அண்ணாமலை, அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக விலகியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பெரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து…
மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த…
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை அலுவலகம் இன்று காலை முதலே தொண்டர்களின் கூட்டத்தாலும், கார்களின்…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…
தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…