தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரையில் நிலத்தகராறு காரணமாக விக்னேஷ் என்பவரை ஊர் நாட்டாமை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நிலையில், அவருடன் பேசியதாக மேலும் 7 குடும்பங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் கே.வி.ராமராஜ் (85) என்பவரின் குடும்பமும் அடங்கும். இந்நிலையில், ராமராஜ் வயது முதிர்வால் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலைப் பொது தகன மேடையில் தகனம் செய்ய நாட்டாமைகள் தடுத்து நிறுத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஊர் கட்டுப்பாட்டை மீறியதற்காக ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தினால் மட்டுமே உடலைத் தகனம் செய்ய அனுமதிப்போம் என்று கூறியதால், வேறு வழியின்றி அவரது குடும்பத்தினர் ரூ.2.1 லட்சம் அபராதம் செலுத்தி இறுதிச் சடங்கை நடத்தினர். மேலும், ஊர் பஞ்சாயத்தின் போது தகவல்கள் கசியாமல் இருக்கச் செல்போன்களைப் பறித்து வைத்துக்கொள்வதும், உளவுத்துறை போலீசாரைக்கூட வெளியேற்றி விடுவதும் இங்கு வாடிக்கையாக நடந்து வந்துள்ளது.
கடந்த 2025 பிப்ரவரி மாதத்திலேயே இந்த கட்டப்பஞ்சாயத்து குறித்துச் சர்ச்சை எழுந்தபோதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உடனடியாகத் தலையிட்டு, சட்டவிரோதமாகச் செயல்படும் நாட்டாமைகளுக்குக் கடிவாளம் போட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மற்றொரு சிறிய அளவிலான 'எபிக் ப்யூரி' ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று…
தமிழ் சினிமாவின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், பிரபல சொகுசு நகை நிறுவனமான 'சல்லானி ஜுவல்லரி மார்ட்' -ன் புதிய பிராண்ட்…
ஜெய்ப்பூரில் உள்ள பொதுப் பூங்காவில் நீண்ட நாட்களாக இளம் பெண்களைக் குறிவைத்து அத்துமீறி வந்த நபர் ஒருவர் கையும் களவுமாகப்…
டெல்லி ஷாதரா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள சர்வோதய கன்யா வித்யாலயா அரசுப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு பயின்று…
தஞ்சாவூரில் தனியார் மருத்துவமனை பங்குதாரர்களின் உள்கட்சிப் பிரச்சினையில், ஒரு தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக மாவட்ட…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்த ஷாலினி (37) என்பவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ்…