கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்த ஷாலினி (37) என்பவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பாக ஷாலினி கருங்கல் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கு தனிப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றிய சாம்சன் (45) என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட சாம்சன், இரவில் வாட்ஸ்அப் மூலம் பேசி பரிவாக நடந்து கொள்வது போல நடித்து ஷாலினியுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.
தனக்குத் திருமணம் ஆகவில்லை எனப் பொய் கூறி ஷாலினியை நம்ப வைத்த சாம்சன், அவருடன் திருமணத்தைத் மீறிய உறவில் ஈடுபட்டு வந்ததோடு, அவரது வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஷாலினி கர்ப்பமானதும், வெளிநாட்டில் இருந்த அவரது கணவரை ஊருக்கு வரவழைத்துவிட்டு, பின்னர் குழந்தை பிறந்த பிறகு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஷாலினி கேட்டபோது சாம்சன் மறுத்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறிய அவர், ஷாலினியை ஏமாற்றியதுடன் திருமணம் செய்ய முடியாது என்றும் கைவிட்டுள்ளார்.
குழந்தையின் எதிர்காலம் குறித்து ஷாலினி தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சாம்சன், “நான் எஸ்பி தனிப்பிரிவில் வேலை செய்கிறேன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டியதோடு, ஷாலினியையும் குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஏட்டு சாம்சன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் ஒருவர், போபால் நகரில் போலித் திருமணக் கும்பலுடன் இணைந்து வெறும் 7…
ரிஷிகேஷ் போன்ற புனிதமான ஆன்மீகத் தலத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலமாக…
கேரளாவின் காளிகாவு பகுதியில் பதிவான ஒரு சாலை விபத்தின் காட்சிகள் பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளன. சாலையின் நடுவே…
காசியாபாத் மற்றும் டெல்லி இடையிலான ரயில் பயணங்களின்போது, சமூக விரோதிகளால் நிலவும் பதற்றமான சூழல் அன்றாடம் பயணிப்போரை பெரும் அச்சத்தில்…
டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவர், பள்ளி வளாகத்திற்குள்ளேயே தீக்குளித்து உயிரிழந்த சம்பவம்…
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவாப் கான் என்ற நபர் பட்டப்பகலில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…