ஐயோ என்னடா கொடுமை?… குழந்தை பிறந்ததும் எனக்கு ஏற்கனவே… கல்யாணம் ஆயிடுச்சுனு சொன்ன ஏட்டு… வாழ்க்கையில் நடந்த ஷாக்கிங் ட்விஸ்ட்… இறுதியில் நடந்தது என்ன?… கன்னியாகுமரியில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 24, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள நடுத்தேரி பிலாவிலையைச் சேர்ந்த ஷாலினி (37) என்பவரது கணவர் ஜோசப் மெசியா தாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பாக ஷாலினி கருங்கல் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றபோது, அங்கு தனிப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றிய சாம்சன் (45) என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட சாம்சன், இரவில் வாட்ஸ்அப் மூலம் பேசி பரிவாக நடந்து கொள்வது போல நடித்து ஷாலினியுடன் நெருங்கிப் பழகத் தொடங்கியுள்ளார்.

தனக்குத் திருமணம் ஆகவில்லை எனப் பொய் கூறி ஷாலினியை நம்ப வைத்த சாம்சன், அவருடன் திருமணத்தைத் மீறிய உறவில் ஈடுபட்டு வந்ததோடு, அவரது வீட்டிலேயே தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இதனால் ஷாலினி கர்ப்பமானதும், வெளிநாட்டில் இருந்த அவரது கணவரை ஊருக்கு வரவழைத்துவிட்டு, பின்னர் குழந்தை பிறந்த பிறகு தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி ஷாலினி கேட்டபோது சாம்சன் மறுத்துள்ளார். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறிய அவர், ஷாலினியை ஏமாற்றியதுடன் திருமணம் செய்ய முடியாது என்றும் கைவிட்டுள்ளார்.

   

குழந்தையின் எதிர்காலம் குறித்து ஷாலினி தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சாம்சன், “நான் எஸ்பி தனிப்பிரிவில் வேலை செய்கிறேன், என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டியதோடு, ஷாலினியையும் குழந்தையையும் கொலை செய்து விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஏட்டு சாம்சன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.