இன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை flipkart மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை எளிதில் முடிந்து விடுகிறது. இதனால் ஏராளமான பொருட்களை ஆன்லைன் மூலமாக தான் ஆர்டர் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தின் குடோனில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 278 கிலோ காலாவதியான பேரிச்சை பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் அவை காலாவதியானது தெரியவந்தது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குப்பையில் கொட்டியுள்ளார்கள். இந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
