இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விநியோகம் மட்டுமன்றி உலகளாவிய இணைய சேவையும் (Internet) பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் முக்கியமான கடலடி ஃபைபர் ஆப்டிக் கேபிள்களை ஈரான் குறிவைத்தால், அது உலகப் பொருளாதாரத்தையே முடக்கும் ஆயுதமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலகளாவிய தரவு பரிமாற்றத்தில் 95 சதவீதம் இந்த மெல்லிய கேபிள்கள் மூலமே நடப்பதால், இதில் ஏற்படும் பாதிப்பு ஈடுசெய்ய முடியாத சேதத்தை உருவாக்கும்.
AAE-1, FALCON போன்ற கேபிள்கள் இந்தியாவின் சர்வதேச இணையத் தொடர்பிற்கு முதுகெலும்பாக உள்ளன. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பில் மூன்றில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் பகுதி வழியாகவே நடக்கிறது. ஒருவேளை இந்த கேபிள்கள் துண்டிக்கப்பட்டால், வங்கிப் பரிவர்த்தனைகள், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்களின் தரவு மையங்கள் முடங்கி இணைய வேகம் கடுமையாகப் பாதிக்கும். போர் நடக்கும் சூழலில் கடலுக்கடியில் ஏற்படும் இத்தகைய பழுதுகளைச் சரிசெய்ய வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில் காலதாமதம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…