தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இபிஎஸ் மீண்டும் ஆட்சியை அமைப்பதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். ஆனால் இபிஎஸ் மீது கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிலையில் செங்கோட்டையன் உட்பட பலரையும் கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார்.
மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் நாகை மாவட்ட திமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றன. கடந்த வாரம் தலைஞாயிறு திமுக நிர்வாகி செல்வி சேவியர் அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று தலை ஞாயிறு திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் அதிமுகவில் இணைந்துள்ளார். 2026 தேர்தலில் டெல்டாவை வசப்படுத்த இபிஎஸ் புதிய வியூகம் வகுத்துள்ளார். நாகை மற்றும் மயிலாடுதுறையில் உள்ள ஆறு தொகுதிகளில் தற்போது 1 மட்டுமே அதிமுக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
