“பஞ்ச பரதேசி, உனக்கு என் பொண்டாட்டி கேக்குதாடா”… கள்ளக்காதலில் விழுந்த மனைவி.. பிளான் செய்து வீட்டுக்கு வரவழைத்து காதலனை கொடூரமாக கொன்ற கணவர்…!

By Nanthini on கார்த்திகை 3, 2025

Spread the love

புதுச்சேரி மாவட்டம் வம்பா கீரப்பாளையம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா செல்லும் சாலையில் நேற்று அதிகாலை உடலில் பல இடங்களில் வெட்டு காயத்துடன் வாலிபரின் சடலம் ஒன்று கிடந்தது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ரெட்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த சந்துரு (28) என்பதும் இவர் சுமை தூக்கும் தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. சந்துரு தன்னுடன் ஒன்றாக வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்த நிலையில் வெங்கடேசன் வீட்டுக்கு சந்துரு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

அப்போது வெங்கடேசன் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகியுள்ளனர். இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் வெளியில் சுற்றி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது மனைவியுடன் நண்பன் தகாத உறவில் இருப்பதை அறிந்த வெங்கடேசன், சந்துரு மற்றும் தன்னுடைய மனைவியை கண்டித்து உள்ளார். ஆனால் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து பழகினர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சந்துருவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி வெங்கடேசன் சந்துருவை மது அருந்துவதற்கு வீட்டுக்கு அழைத்துள்ளார்.

   

அவரும் இரவு நேரத்தில் மது அருந்துவதற்காக சென்ற நிலையில் வெங்கடேசனுடன் அவருடைய நண்பர்கள் ஆனால் சரண் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இருந்தனர். அப்போது மனைவியுடன் உறவு குறித்து சந்துருவிடம் வெங்கடேசன் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் சந்துருவை அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து மறைத்து வைத்திருந்த அரிவாளையை எடுத்து வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.