அடுத்த அதிரடி..! சற்றுமுன் முடிவை மாற்றினார் செங்கோட்டையன்…. எடப்பாடிக்கு செக்..!!

By Soundarya on ஐப்பசி 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் அதிமுகவில் பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பு விவகாரத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய பிறகு ஓபிஎஸ், டிடிவி , சசிகலா ஆகியோரை சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவ்வாறு எந்த சந்திப்பும் நடக்கவில்லை. அதிமுக தலைமைக்கு சவால் விடுத்து ஒரு மாதத்தை ஆகிவிட்ட நிலையில், நிர்வாகிகளின் எண்ண ஓட்டங்களை அறிவதற்கு ஆலோசனை நடத்த உள்ளாராம்.