எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக போகிறாரா ஆதிரை..? ரசிகர்களின் கேள்விக்கு அவரே சொன்ன பதில் இதுதான்..!!

By Priya Ram

Published on:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலை பார்ப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டி.ஆர்.பி-யில் எதிர்நீச்சல் சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. எதிர் நீச்சல் சீரியலின் பரபரப்பான கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சத்யா தேவராஜன்.

   

ஆரம்ப காலகட்டத்தில் சத்யா தேவராஜன் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு லிவிங்ஸ்டன் மகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் அருவி சீரியலில் நடிக்க சத்யா தேவராஜனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் நடிக்க ஆரம்பித்த ஒரு சில மாதங்களிலேயே எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடிக்க சத்தியா கமிட் ஆனார்.

ஆதிரை கதாபாத்திரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் சத்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் புது ப்ராஜெக்ட் களில் நடிக்க விரும்புகிறேன். இதற்கு முன் அணுக நினைத்தவர்கள் நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் எனக்கு மேல் பண்ணுங்க என கூறியுள்ளார். அதனை பார்த்ததும் ரசிகர்கள் நீங்கள் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக போகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த சத்யா, கண்டிப்பாக அப்படி எல்லாம் நான் செய்ய மாட்டேன். புது ப்ராஜெக்டுகளில் நடிக்க வேண்டும் என ஆசை. மேலும் youtube-க்கு கன்டென்ட் கொடுக்காதீங்க. இப்போதைக்கு நான் விலகவில்லை. அப்படியே வெளியேறுவது என்றால் சொல்கிறேன் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

author avatar
Priya Ram