கல்லூரி மாணவன் & ஆக்ஷன் ஹீரோ.. இரண்டிலும் கலக்கினார் ஜி.வி.பிரகாஷ்.. ‘ரெபல்’ படத்தின் முதல் நாள் வசூல்..

By Priya Ram

Updated on:

இயக்குனர் முகேஷ் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவான படம் ரெபல். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ரெபெல் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிரேமலோ பட ஹீரோயின் மமிதா பைஜு நடித்துள்ளார்.

   

மேலும் கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், வெங்கடேஷ் வி.பி, ஷாலு ரஹீம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 80-களில் கேரளாவை பின்னணியாக வைத்து மூணாறு தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகள் பாலக்காடு கல்லூரியில் போராடும் அவல நிலையை அந்த படத்தில் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த படத்தில் புரட்சிகரமான கல்லூரி மாணவராக நடித்து ஜி.வி பிரகாஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உண்மை சம்பவத்தை சுவாரசியமாக எடுத்துக் கூறியுள்ளார் இயக்குனர் நிகேஷ். இந்த படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

படத்தின் இசையும் சூப்பராக அமைந்துள்ளது. ஆக்ஷன் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் களமிறங்கியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாளில் ரெபல் படம் 2 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Priya Ram