Categories: சினிமா

சீரியலை முடித்த கையோடு.. மகளின் திருமணத்தையும் முடித்த எதிர்நீச்சல் திருச்செல்வம்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் அவர்களின் மகள் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகப் பிரபலமான இயக்குனர் என்றால் அது திருச்செல்வம் தான். தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் முதலில் டப்பிங் திரையரங்கில் மற்றும் இளையராஜா மியூசிக் கம்போசிங் டப்பிங் ஒலிப்பதிவு கூடத்தில் பணியாற்றி வந்தவர். பிறகு 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றியிருக்கின்றார்.

தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் பணியாற்றியிருக்கின்றார். அதன் பிறகு தான் சின்னத்திரையில் சீரியல்களை இயக்கும் எண்ணம் இவருக்கு தோன்றியது. முதன்முதலாக 2002 ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த மெட்டி ஒலி என்ற சீரியலை இயக்க தொடங்கினார். அந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

அந்த தொடரின் மூலம் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் அறிமுகமானார். பிறகு தேவயானி நடித்து மிகப்பெரிய ஹிட்டு கொடுத்த கோலங்கள் என்ற தொடரை இயக்கியதும் இவர்தான். அந்த சீரியலிலும் தொல்காப்பியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை கொடுக்க இந்த தொடருக்கு பல விருதுகளையும் வாங்கி இருந்தார்.

இதனை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் உள்ளிட்ட பல சீரியல்களை இயக்கியிருக்கின்றார். தன்னுடைய சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கும் இவர் பெண்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஒரு சீரியலை உருவாக்கினார். அதுதான் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல். இந்த சீரியல் டிஆர்பி யில் முதலிடத்தில் இருந்தது.

மேலும் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த சீரியல்களை ஆர்வமாக பார்த்து வந்தனர். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாச போராட்டம், பெண்களின் உரிமை, வீட்டில் இருக்கும் பெண்கள் படும் துன்பங்கள் மற்றும் அவமானங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த தொடரை எடுத்திருந்தார்.

 

இந்த சீரியலில் ஆதிகுணசேகரனாக நடித்த மாரிமுத்து இறந்த பிறகு அப்படியே மாறிவிட்டது. இவருடைய கதாபாத்திரத்தில் வேலு ராமமூர்த்தி என்பவர் நடித்து வந்தார். இருப்பினும் இந்த சீரியல் போகப்போக ரசிகர்களிடையே திருப்தியை கொடுக்காத காரணத்தினால் இதனை முடிவுக்கு கொண்டு வந்து விட்டார் திருச்செல்வம். அந்த வகையில் இந்த சீரியல் கடந்த எட்டாம் தேதி உடன் முடிவுக்கு வந்தது.

பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது ரசிகர்களிடையே சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் வீட்டில் ஒரு விசேஷம் நடந்துள்ளது. அதாவது திருச்செல்வம் அவர்களின் மகள் பிரியதர்ஷினிக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

45 minutes ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

47 minutes ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

3 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

3 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

3 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

3 மணத்தியாலங்கள் ago