Categories: சினிமா

அடம் பிடித்த டைரக்டர்.. கந்தசாமி படம் ஃப்ளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்.. தயாரிப்பாளர் சொன்ன தகவல்..!

Spread the love

கந்தசாமி திரைப்படம் தோல்வியடைந்ததற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் தான் என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து நடிக்கக்கூடிய மிகச் சிறந்த நடிகர். விக்ரமின் பல திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியும் அடைந்திருக்கின்றது.

#image_title

அப்படி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி மக்களிடையே சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கந்தசாமி. 2009 ஆம் ஆண்டு சசி கணேஷ் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தை கலைப்புலி எஸ் தானு இயக்கியிருந்தார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் பிரபு, வடிவேலு, வித்யார்த்தி உள்ளிட்ட பிரபலங்களும் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு மிகப் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வந்தார் கலைப்புலி தாணு. அதிலும் விக்ரமின் சேவல் கெட் அப் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பியது. ஆனால் இப்படம் வெளியாகி ரசிகர்களை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்று தான் கூற வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார்.

அவர் தெரிவித்திருந்ததாவது “கந்தசாமி திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ரன் டைம் இருந்தது. நான் இயக்குனரிடம் ரன் டைம் குறைத்தால் படம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். ஆனால் இயக்குனரோ ஹிந்தியில் வெளிவந்த லகான் திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ரன் டைம் இருந்தது. இருப்பினும் அப்படம் நன்றாக ஓடியது. அதே போல் நம்ம படமும் நன்றாக ஓடும் என்று கூறினார்.

இருந்தும் நான் கூறினேன் தம்பி இந்த படம் மிகச் சிறப்பான படம். நீ கூறுவது போல் படம் ஓடிவிட்டால் பிரச்சனை இல்லை ஓடவில்லை என்றால் நாளை என்னை தேடி நடிகர்கள், இயக்குனர்கள் வருவார்கள். ஆனால் உன்னை தேடி வருவதற்கு வாய்ப்பு குறைவாக இருக்கும் அதனை கவனத்தில் வைத்துக் கொள் என்று கூறியதாக அவர் பேசியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago