அதிமுகவில் செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் சிலரையும் கூண்டோடு நீக்கி இபிஎஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார். நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் குறிஞ்சிநாதன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், அந்தோணி ரமேஷ், ஈரோடு மண்டல IT விங் துணைச் செயலாளர் மோகன் குமார் ஆகியோரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
