ஓபிஎஸ் மண்ணில் இபிஎஸ்… பிரச்சார வாகனத்தின் குறுக்கே வந்த நபர்கள்… பெரும் பரபரப்பு சம்பவம்…!

By Divyamayakannan on புரட்டாதி 6, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். இந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து பல தலைவர்கள் வெளியேறி விட்டதாக தகவல் வந்தது. தற்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  10 நாள் கெடு விடுத்துள்ளார். எண்ணி பத்து நாட்களுக்குள் அதிமுகவில் இருந்து சென்ற அனைவருமே திரும்பவும் அதிமுகவிற்கு வர வேண்டும் என்று கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எண்ணத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேற்று மாலை தேனியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அங்கிருந்த சில பெண்கள் அதிமுக கொடி ஓங்கி நிற்க வேண்டும் என்ற வசனம் பேசி உள்ளார்கள், மற்றும் பேனரையும் வைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். பிரச்சாரம் முடிந்த பிறகு சென்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வாகனத்தை நிறுத்தி அதிமுக ஒன்றினை வேண்டும் என்று கோஷம் எழுப்பி உள்ளனர். பல இடங்களில் போஸ்டர்களையும் ஒட்டி வைத்துள்ளார்கள்.

   

பின்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கம்பம் பிரச்சாரத்திற்காக சென்றார். அப்போது பேசியவர் அதிமுக என்பது ஜனநாயக கட்சி, யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வரலாம், தொண்டர்கள் கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகலாம் என்று கூறினார். திமுகவில் இருந்து திமுக தலைவர்கள் வெளியேற முடியுமா? ஆனால் அதிமுகவோ சுதந்திரமான கட்சி அதனால்தான் அனைவரும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடக்கிறார்கள் என்று பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.