தமிழக அரசியல் களம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக நகர்கிறது. கூட்டணியை இறுதி செய்வதற்காக கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். திமுகவின் கூட்டணி ஏற்கனவே பலம் வாய்ந்ததாக உள்ள நிலையில் பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்கின்றன. அதில் அதிக சீட் வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணி தற்போது வரை பலமாகத்தான் உள்ளது. அதே சமயம் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பாஜகவுடன் கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
அதே சமயம் 2021 தேர்தலில் தங்களுடன் இருந்த பாமக இந்த முறையும் அழைத்து வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தீவிரமாக பேசி வருகிறார். தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் வெடித்த நிலையில் இருதரப்பும் இரு துருவங்களாக செயல்பட்டு வந்தது. அன்புமணி தனது சுற்றுப்பயணத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவர் அதிமுகவுக்கு தான் ஆதரவு அளிப்பார் என சொல்லப்பட்டது. கட்சியும் கட்சி சின்னம் மற்றும் கொடி ஆகியவை அன்புமணிக்கு தான் சொந்தம் என தேர்தல் ஆணையம் கூறியதாக தகவல் வெளியான நிலையில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்புமணி ராமதாசை சந்தித்து பேசி இருந்தார். தொடர்ந்து ராமதாசையும் அவர் சந்தித்து பேசிய நிலையில் இந்த கூட்டணி பேச்சு வார்த்தைகள் இறுதி அடைந்ததாக சொல்லப்பட்டது.
அதே சமயம் மீண்டும் அப்பா மகன் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இப்படியான நிலையில் 30 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட்டு ஆகியவற்றை பாமகவுக்கு தர அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறுபக்கம் விஜயுடனும் கூட்டணி நடத்தி வருவதால் அதிமுக, பாமக மற்றும் TVk கூட்டணி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்த ராமதாசை இபிஎஸ் நேரில் சந்தித்த நிலையில் அப்போது மகிழ்ச்சியுடன் உரையாற்றினார். இதனால் ஏறத்தாழ அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது என்றும் ராமதாஸ், அன்புமணி சந்தித்து பேசுவது மட்டும்தான் மிச்சம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…