BREAKING: கூட்டணியில் அதிருப்தி.. சற்றுமுன் முடிவை மாற்றினார் EPS..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி மற்றும் களப்பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கிராமப்புற மக்களிடையே பெரும் அதிருப்தி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் மற்றும் அடித்தட்டு மக்களின் வாக்கு வங்கியைப் பாதிக்கக்கூடும் என்பதால், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளைத் தான் பார்த்துக் கொள்வதாகவும், இதில் மற்ற நிர்வாகிகள் யாரும் தன்னிச்சையாகக் கருத்துச் சொல்லித் தலையிட வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த ‘SIR’ பணிகளில் நிர்வாகிகள் சரிவர ஈடுபடவில்லை என்று இபிஎஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நிர்வாகிகள் வெறும் மேடைப் பேச்சுகளுடன் நின்றுவிடாமல், நேரடியாகத் தொகுதி வாரியாகச் சென்று மக்கள் பணிகளிலும் களப்பணிகளிலும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி பணிகளைத் துரிதப்படுத்தவும், அரசின் குறைகளை மக்களிடம் கொண்டு செல்லவும் தவறும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ள