director shankar

அந்த படம் பார்த்தேன்… அவர் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டார் – மனம் திறந்து விமர்சித்த பிரபல இயக்குனர்!

By Elango on மார்கழி 31, 2025

Spread the love

இயக்குனர் ஷங்கர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, சிறை உண்மையிலேயே சிறந்த படம். நான் நிறைய இடங்களில் படம் பார்க்கும்போது கண்ணீர் சிந்தினேன். படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் அதில் நடித்த கலைஞர்களின் நடிப்பும் படம் முடிந்த பிறகும் மனதில் நீங்காமல் நிலைத்து நின்றன.

விக்ரம் பிரபு தனது நடிப்பால் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அக்சய் குமார் அனிஷ்மா அனில் குமார் ஆகியோரது நடிப்பு அவர்களது கதாபாத்திரங்களில் அப்பாவித்தனத்தையும் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியது. இயக்குனர் சுரேஷ் தனது முதல் படத்திலேயே நம் மனங்களை சிறை பிடித்து விட்டார்.

   

சிறை படத்தின் இறுதிக்காட்சியில் சொல்லப்பட்ட செய்தி மிகவும் வலுவானதாகவும் இன்றைய காலத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் இருந்தது என்று இயக்குனர் ஷங்கர் சிறை படம் குறித்து தனது பதிவில் பாராட்டி இருக்கிறார்.