மது அருந்துபவர்கள் மது பாட்டில்களை சாலைகளில் வீசி செல்வதால் மனிதர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலையில் இதனை தடுப்பதற்காக காலி மது பாட்டில்களை மதுக்கடைகளில் திரும்பப்பெறும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. நீலகிரி மாவட்டம் அதிகமாக சுற்றுலா பயணிகள் கூடும் இடமாக இருப்பதால் வனப்பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் ஒவ்வொரு காலி பாட்டிலுக்கும் பத்து ரூபாய் திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிறகு தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல் செய்யப்படுவது ஏன் என்பதற்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். அதாவது மது அருந்துவோர் காலி பாட்டில்களை விவசாய நிலம், சாலைகளில் வீசுவதை தவிர்க்கவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. வைப்புத் தொகையாக பெறப்படும் பத்து ரூபாயை காலி பாட்டிலை திரும்ப கொடுத்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…
தமிழக வெற்றிக் கழகத்தில் "தவெகவில் இணைந்த கையோடு முக்கிய பொறுப்பு..." சிங்கை ராமச்சந்திரனுக்கு CM விஜய் வழங்கிய பதவி... தவெகவில்…
பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10…
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர் ஆகியோர் சேர்ந்து, 40 வயதுடைய பெண்…
சீனாவின் காசு மாநிலம் லின்சியா நகரில் கட்டிடங்களுக்கு இடையே உள்ள குறுகிய மற்றும் ஆழமான இடைவெளியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டியை…