இளைஞர்கள் அனைவருக்கும் ரூ.15,000.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு.. உடனே முந்துங்க…!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

புதிதாக வேலைக்கு சேரும் இளைஞர்கள் அனைவருக்கும் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குகின்றது பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் பயன்பெற EPFO இல் பதிவு செய்திருக்க வேண்டும். மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பது அவசியம். விருப்பமுள்ளவர்கள் https://pmvbry.epfindia.gov.in என்ற இணையதளத்தில் அப்ளை பண்ணலாம். 2027 ஜூலை மாதம் வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இபிஎஃப்ஓ) பதிவு செய்திருக்க வேண்டும். இவர்களுக்கு 3 தவணை முறைகளில் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் நேரடியாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். இதுதவிர உற்பத்தித் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் குறைந்த மாத வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.